Thai Tamilpalli Annual day message.

அரவணைக்கும் பெற்றோருக்கும், அன்பான ஆசிரியருக்கும், அறிவிற்சிறந்த சிறார்களுக்கும், அறப்பணியாற்றும்  தாளாளருக்கும் வெற்றிவேல்அறக்கட்டளையின் சார்பாக வணக்கங்கள்.

 
வெற்றிவேல் அறக்கட்டளையின் பணி  பற்றி சுருக்கமாக இங்கு கூற விரும்புகிறேன். பொதுப்பணியில் ஈடுபட விரும்பும் நண்பர்களால் துவக்கப்பட்டது. பின் இவ்வெண்ண அலைகளை ஒத்த பலர் எம் அறக்கட்டளையின் பணி சிறக்க தங்களை இணைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். தமிழகத்தில் துவங்கி பின் உலகில் பல பகுதிகளிலும் கல்வியின் தரத்தை உயர்த்துவதே வெற்றிவேல் அறக்கட்டளையின்  முழுமுதற் குறிக்கோளாகும்.
 
இதனடிப்படையில் நாங்கள் முதலாவதாக தேர்ந்தெடுத்த பள்ளி நம் தாய் தமிழ் மழலையர் துவக்கப்பள்ளி ஆகும். ஏன் தாய் தமிழ் பள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் சென்னையில் இருந்து இவ்வளவு தொலைவில் உள்ள பள்ளியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? காரணம் நம் பள்ளி தமிழ் மொழி வழி பாடம் புகட்டுவதே. மற்றொன்று தம் பிள்ளைகளை பாடம் பயில அனுப்பும் பெற்றோரின் ஆர்வமும், அவர்களின் இயலாமையின் போது பள்ளி தம் பள்ளிக்கட்டணங்களில் சலுகைகளை காட்டுவதும், தளர்வுகள் கொடுப்பதும் , பள்ளிக்கடணத்தை குறைத்து வைத்திருப்பதும் ஏனைய காரணங்களாகும்.
 
தாய்மொழி வழிக்கல்வியின் சிறப்பை இங்கு கூற விரும்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழி தாய்மொழி தான். அப்படியே பிற மொழியில் பேசினாலும் எழுதினாலும் நம் மூளை சிந்திப்பது தாய் மொழியில் தான். பிறகு அதனை நம் ஞாபகத்தினால் மூளையில்  மனப்பாடம் செய்து வைத்திருக்கும் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த பிறகே அம்மொழியில் பேசவோ எழுதவோ முடியும் இக்காரியம் நடக்க சில மணித்துளிகளே தேவைப்படுகிறது. நம் பிள்ளைகள் பயில்வதை தாய்மொழியில் பயின்றால் எளிதில் புரியும். அவர்களின் சிந்தணா சக்தி கண்டுபிடிப்புகள் செய்யுமளவிற்கு சிறப்பு பெரும் 
 
சீனர்கள், ஜப்பானியர்கள், இரஷ்யர்கள், ஜெர்மானியர்கள், மற்றும் பலர் தத்தம் தாய்மொழியிலேயே அத்தனையும் பயில்கின்றனர். அவர்களின் சிறப்பு இவ்வுலகம் முழுக்க பரவியிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களை எல்லாம் விட அறிவிற்சிறந்த நாம், தாய் மொழியில்பயின்றோம் என்றால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று நினைத்து பாருங்கள். அப்பெருமைக்குரிய வேலையை தாய் தமிழ்ப்பள்ளி செய்வதே எங்களை இங்கே இழுத்துப்போடது. அத்தைகைய பணிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
 
வெற்றிவேல் அறக்கட்டளையின் பணியில் அடுத்த கட்டமாக முதலாம் வகுப்பு கணித பாடங்களை குறுந்தகடுகளில் இங்கு கொடுத்துள்ளோம். மேலும் இது போல் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு பாடத்துக்கும் குறுந்தகடுகள் தயாரித்து கொடுக்கவுள்ளோம் அவற்றை தாய் தமிழ் பள்ளி சிறப்பாக உபயோகிக்கும் என்றும் அதனால் தம் மாணவர்கள் பெரும் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்றும் பெரிதும் நம்புகிறோம். இணையம் வழியாக எங்கள் இணையப்பக்கத்தில் இருந்தும் இந்த பாடங்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். எங்கள் இனைய தள முகவரி www.vetrivelfoundation.org ஆகும். இந்தப்பாடங்கள் அனைத்தும் முற்றிலும்இலவசம் , மற்றவர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு. ஏனைய பள்ளிகளுக்கும் இதனை இலவசமாக பதிவிறக்கி தம் மாணவ மணிகளுக்கு இலவசமாக கொடுக்கலாம் .
 
நன்றி. வணக்கம்.